உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் எதிர்வரும் 01.01.2026 முதல் லஞ்ச் சீற் பாவனை முற்றாக தடை செய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் எனவும் பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
என்றுமில்லாத பொலித்தீன் பாவனை அதிகரிப்பு அதிலும் குறிப்பாக சூடான உணவுகளை லஞ்சீற்றில் இடுவதால் வருகின்ற மோசமான உடல்ரீதியான பாதிப்புகள் தொடர்பில் தொடர்ந்தும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றார்கள். இந்நிலையில் பருத்தித்துறை நகரசபையின் தீர்மானத்துக்கு மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர்.


0 Comments