உடுப்பிட்டி தெற்கு இளந்தளிர் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் வெகு விமரிசை

 

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு இளந்தளிர் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை 21.12.2025 காலை 9.00 மணியளவில் உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத் தலைவர் சிதம்பரப்பிள்ளை சிவரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக வடமராட்சி தெற்கு  மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் அவர்களும் அவரது பாரியாரும், 

சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சனாதன் அவர்களும், கரவெட்டிக் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் பா. கலைவாணி அவர்களும், ஓய்வுநிலை ஆசிரியரான இரத்தினசிங்கம் லின்ரன் தேவராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.


கௌரவ விருந்தினர்களாக உடுப்பிட்டி சந்திரசேகர வீரபத்திரர் சுவாமி ஆலய பிரம்மசிறீ கனககேதீஸ்வர குருக்கள் அவர்களும், உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய சேவல்கொடியோன் குருக்கள் அவர்களும், உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபர் நடராசா சுதாகர் அவர்களும், J - 354 கிராம அலுவலர் த. சுதர்சன் மற்றும் J - 352 கிராம அலுவலர் ஜோ. சுசீந்திரன் அவர்களும், ஆங்கில ஆசிரியர் சடகோபன் அவர்களும் கலந்து  சிறப்பித்தனர்.

முன்னதாக இளந்தளிர் முன்பள்ளி முன்றலில் இருந்து சிறார்களின் பாண்ட் வாத்திய சகிதம் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கொடியேற்றலைத் தொடர்ந்து  மங்கள விளக்கேற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.  

ஆசிரியர்கள், பெற்றோர்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முன்பள்ளியின் சிறுவர்களின் பேச்சு, பாடல்கள், நடனம், தனிநடனம் என பலவகையான கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.  

குறிப்பாக சிறார்களினால் சூழலைப்  பாதுகாக்கும் நோக்கிலான கழிவகற்றல் தொடர்பில் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றிருந்தது. குறித்த நாடகமும், நடனங்களும்  பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

முன்பள்ளியில் நீண்டகாலமாக சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் இந்திராணி ஆசிரியருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. 

தொடர்ந்து உடுப்பிட்டியின் மூத்தோர்கள் மற்றும் கல்வியில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்களுக்கும் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.



பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கல்வியியலாளர்கள், ஊரவர்கள் என மண்டபம் நிறைந்ததாக நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மதிய போசனத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.
















Post a Comment

0 Comments