யாழ்ப்பாணம் - வடமராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாண்ட் வாத்திய போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகளின் அணி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலயமட்ட பாண்ட் வாத்திய போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை 19.12.2025 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி முதலாம் இடத்தையும், பருத்தித்துறை வட இந்து ஆரம்பப் பாடசாலை இரண்டாம் இடத்தையும், கரணவாய் தாமோதரா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments