மரண அறிவித்தல் - வேலாயுதம் கிருஷ்ணபவன்

 


வடமராட்சி புலோலி - மந்திகையைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி தெற்கு சந்தனத்தறையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கிருஷ்ணபவன் அவர்கள் 17.12.2025 புதன்கிழமை காலமானார்.

வேலாயுதம் - மனோன்மணி தம்பதிகளின் மகனும், சுப்பிரமணியம் - கமலா தம்பதியினரின் மருமகனும்,

கலாராணியின் (அம்மன்) அன்புக் கணவரும்,

கனகமணி, கமலாவதி, சரவணபவன், அம்பிகாவதி, யோகாவதி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பவன்நிதா, அட்ஷயன், கிருஷிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  18.12.2025 வியாழக்கிழமை மதியம் 11.30 மணியளவில் உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...

--------------------------------------------------------------------------------------------------------------

போர் நெருக்கடி காலங்களில் வடமராட்சிக்கு வீரகேசரி பத்திரிகை விநியோகிப்பதில் முன்னின்றவர்

மக்கள் சரியான செய்திகளைக் கூட அறிந்து கொள்ள சிக்கல்களை எதிர்கொண்ட போர் நெருக்கடி காலத்தில் தனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் சேர்ந்து (தில்லைநாதன் - வீரகேசரி - வடமராட்சி நிரூபர்) தனியார் பேரூந்தில் கொடிகாமத்தில்

வந்திறங்கும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகைகளை பேரூந்துகளிலும் பல நாட்கள் சைக்கிள்களிலும் எடுத்து வந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடமராட்சி முழுவதும் உள்ள பத்திரிகை விநியோகத்தர்களிடம் சேர்ப்பிப்பதில் முன்னின்றவராவர்.

குறிப்பிட்ட காலம் உதயன், ஈழநாடு பத்திரிகைகளின் வடமராட்சி விநியோகத்தராகவும் பணியாற்றியுள்ளார். மந்திகையில் சில ஆண்டுகள் பத்திரிகைக் கடை ஒன்றையும் வைத்திருந்துள்ளார்.

பின்னர் இலங்கை நூற்றல் நெய்தல் ஆலையின் (வல்லை நெசவாலை) பணியாளராக இருந்துள்ளார்.

Post a Comment

0 Comments