பிரமாண்டமாக இடம்பெறவுள்ள வல்வை இந்திரவிழா


யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய தீர்த்தத் திருவிழா அன்று பிரமாண்டமான முறையில் இடம்பெறும் இந்திரவிழா எதிர்வரும் 12.05.2025 திங்கட்கிழமை இரவு இடம்பெறவுள்ளது. 

இந்திரவிழாவை அலங்கரிக்கும் முகமாக 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு வாழைமரங்கள் மற்றும் வர்ண விளக்குகள் அலங்காரத்துடன் வானுயர் கட்டவுட்டுகள், வானுயர் முப்பரிமாண பொம்மைகள், 100 ற்கு மேற்பட்ட ராட்சத புகைக்கூண்டுகள், நீர் நடன (Water dance) நிகழ்வுகள், பத்திற்கு மேற்ப்பட்ட மேடைகளில் இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்சிகள், பொம்மலாட்ட நிகழ்வுகள், சிலம்பாட்ட நிகழ்வுகள் போன்ற விஷேட நிகழ்வுகளுடன் நடைபெறும். 

வல்வை இந்திரவிழாவைக் காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.  


Post a Comment

0 Comments