"கட்சிகளுக்கு வாக்களியுங்கள்" என்று ஒரு பிரசாரம் கடைசி நேரத்தில் சாதாரண மக்களுக்கு சொல்லப்படும் உ(அ) பாயமும் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்படலாம்.
ஜனாதிபதித் தேர்தல் போல அல்ல இது.
ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் உண்டு.
ஒரு தலைவர் வெளிப்படையாக, தாம் இரண்டு சின்னங்களுக்கு வாக்களித்ததாகச் சொன்னார். அது புள்ளடி முறை அல்ல. இலக்க முறை.
நேற்று ஒரு தமிழ்த் தலைவர் ' தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்' என்று மக்களிடம் கேட்டிருந்தார்.
அந்தத் தலைவர்கள் செய்த, சொன்ன வழியில் இம்முறைத் தேர்தலில் சாதாரண மக்களும் வாக்களிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
வாக்களிக்கச் செய்பவர்களிடம் வீட்டிலுள்ளவர்கள் உறவினர் நண்பர்கள் சொல்ல வேண்டிய அறக் கடமை ஒன்றுண்டு.
விரும்பும் ஒரு கட்சிக்கு புள்ளடி இட்டு வாக்களிப்பதே இத்தேர்தல் முறை!
கட்சிகளுக்கல்ல!!
அப்படி அளிக்கப்படும் வாக்குகள் யாவுமே செல்லுபடியற்றதாகி விடும்.
நீங்கள் விரும்பும் சின்னத்துக்கு அருகே உள்ள பெட்டியில் புள்ளடியிட்டால் போதும்.
0 Comments