வடமராட்சி ஊடகத்துறையின் அடையாளம்!- தில்லை ஐயாவுக்கு இன்று வயது 75

 

வீரகேசரி உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்களின்  மூத்த பத்திரிகையாளராகவும், வடமராட்சி ஊடக இல்லத்தின் முன்னாள் தலைவராகவும் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இன்றும் தொடர்ச்சியாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தில்லை ஐயா இன்று 75 ஆவது அகவையில் கால் பதிக்கிறார்.
அவர் மேலும் பத்திரிகைத்துறைக்கு சேவையாற்ற வாழ்த்துகிறோம். 

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் எந்த சந்தியில் என்றாலும், எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத் தான் கேட்கி!றார்கள் உடனடியாகவே என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட மூத்த  செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் அந்த பேச்சு நிறைவுறாது.  

அரைநூற்றாண்டுக்கும் அதிகமான  காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து   இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் இன்று தனது 75 வது  அகவையில் பிரவேசிக்கிறார். இதுவரையான  முக்கால் நூற்றாண்டு வாழ்வில் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தை  தில்லை பத்திரிகைத்துறைக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

வடமராட்சி மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும  அதிகமான காலமாக எனக்கு நெருக்கமான நட்புறவு. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்து விடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே முளைவிட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட.

புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்த வேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர். ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில் வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. 

ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக் கொள்வார்.  ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.

தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக் கொண்டார். இவ்வாறு தான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக் கொண்டதாக  கூறுவார் தில்லை. 

பாடசாலை முடிந்து  வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே அவர்  செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள்.

வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும்் செய்ய வேண்டி வந்தது. பத்திரிகைகளில்   இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பார்களாம் அந்த குழைத்தரகர்கள். 

தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்து முடிந்த கையோடு  அந்த தரகர்கள் அருகில் தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் சுவாரஸ்யமாக கூறுவதுண்டு.

பாடசாலைக்  கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. கண்டியில் இருந்து அப்போது வெளியாகிய  ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித் துறையில் அவர் காலடி வைத்தார்.  அந்த பத்திரிகையின் ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்னர் காலமான  பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மனைவியின் தந்தையார். 

‘செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை அடுத்த பேச்சின்றி இணங்கிக்கொண்டார். பத்திரிகைத்துறையில் அன்று  பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக   நீண்டு இன்றும்  தொடருகிறது அவரின் செய்திப்பணி.

பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி  அந்த வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார். 

1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய தில்லையை  வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ் சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்றுமாறு பணித்தார்.

பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராகவும் மாற்றியது. ஆபத்து நிறைந்த அந்த காலகடடத்திலும்,  தில்லை எந்த தயக்கமும் இன்றி துணிவாற்றலுடன்  அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை செம்மையாகப் பணியாற்றினார்.


இலங்கையின்  உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களை  தேசியரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டர்களாக மாற்றியது. அன்றைய சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாதது.  பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்த வேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.

அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைக்கு் மத்தியிலும்,  அர்ப்பணிப்புச் சிந்தையுடன் செய்த  யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது.

1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார்.

போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். 

அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருது ஒன்றும் தில்லைக்கு  கிடைத்தது.

பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவசாலிகளின்  வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டாலும், நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறைக்கு நகர்ந்து விடும்.

அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற தில்லையின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. 

தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து பத்திரிகைத்துறைப் பணியை செவ்வனே  தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம்.

வீரகத்தி தனபாலசிங்கம் 

----------------------------------------------------------------------------------------------------------------------------

Veteran Tamil Journalist Sinnathurai “Thillai” Thillainathan Celebrates his 75th Birthday on 29 June 2025


My close friend and journalistic colleague Sinnathurai Thillainathan celebrates his 75th Birthday on 29 June 2025. Thillainathan known popularly as “Thillai” has devoted 57 years of his life to journalism as a career. Journalism to Thillai is not merely a profession but a dedicated vocation.

To many Tamil newspaper readers in the Vadamaratchy sector of the Jaffna peninsula, the term “Reporter” is synonymous with that of S.Thillainathan. He has received many awards and accolades over the years for his journalistic achievements.

Thillai born in Manthigai in Point Pedro completed his secondary education at the Puloly Methodist Mission Tamil Mixed School. After winning an essay prize in a competition held by the “Seithy” newspaper published in Kandy, Thillai became the Pt. Pedro correspondent of the same newspaper in 1968. He was 18 years old when he entered the field of journalism as a correspondent.

In 1969 ,Thillainathan was appointed as the Nelliaddy Correspondent of the Jaffna based newspaper “Eezha Naadu”. K.Sivapragasam the then editor of the Colombo based Tamil daily “Virakesari” recruited Thillai as the newspaper’s Puloly Correspobdent in 1972.

The Vadamaratchy area of Jaffna peninsula gained national and international importance after “Operation Liberation”was conducted by the armed forces in 1987. The “Virakesari” too acknowledged these changed circumstances by upgrading Thillainathan as the Vadamaratchy correspondent. After the Armed forces re-captured Jaffna through “Operation Riviresa” in 1996, Thillainathan was made Jaffna Correspondent in 1997 by the “Virakesari” .

The escalation of the ethnic crisis and the outbreak of war changed newspaper “ journalism in Sri Lanka. The armed conflict and its consequences became the staple of newspapers especially those published in Tamil. This was because the war was essentially fought in the Tamil speaking regions of the north and east.

This resulted in a great responsibility being thrust upon the Tamil journalists serving as area correspondents in the north and east. Their roles changed from provincial to national due to the importance of war -related happenings in the north and east. In addition to battlefront developments, these journalists also had to report on the impact of war on the population and the problems faced by ordinary people.

Many Tamil journalists in the north and east could not cope with this new scenario.Some dropped out while several others simply faded away. In a tragic twist, some members of the fourth estate were killed or made to disappear.

Thillai was among the fortunate journalists who survived the war and its consequences. To his credit, Thillainathan demonstrated grit and determination in discharging his journalistic duties during those troubled times. He was an ordinary man faced with an extra-ordinary situation. Thillai proved his mettle by working for decades as a successful journalist in a “trouble spot”for many decades.

Thillainathan along with a few others is the last of a dying breed in Sri Lanka. He is one of the handful of journalists in the field who are conduct themselves with commendable responsibility in their journalistic writings.They do not engage in sensationalism, fabrication, character assassination or unfair criticism. Above all they are committed to truth and hold facts as sacred. Thillai in his own way is a distinguished member of this honourable group of journalists.

Thillai is all-round journalist who excels in multiple types of news reporting. He is extremely hard-working and industrious. Among Thillai’s many scoops is the news of the arrest of Thangathurai,Kuttimaniani and Jegan by the navy in 1981. The “Virakesari”stopped press and re-cast the front page with Thillai’s story about the sensational arrests as the lead story.

Thillainathan also made his mark in covering important court cases . Among the many noteworthy cases he has covered are the Kamalam Ramachandran murder, the two multiple murder cases of Kambar malai and the Krishanthy Kumaraswamy disappearance and murder case Thillai also made a reputation for himself by assisting veteran Jaffna correspondent Sellathurai in covering the Sansoni Commission proceedings in Jaffna.

Let me conclude on a personal note. I have known Thillai for more than four decades. We are both natives of Vadamaratchy. In those days, he would visit me whenever I stayed in my mother’s ancestral village Kaddaively the postal address of which is Thunnalai South,Karaveddy. I have also been a regular visitor to his home and his makeshift office at a tailoring establishment in Puloly .

Those were indeed happy times and I am immensely grateful to him for the various kinds of help he has given me in the past. I am also thankful for the affection, regard and our abiding friendship. My heartiest congratulations to Thillai for a productive life ,well -lived. Happy Birthday Thillai ! Best wishes to you, your wife, your three daughters and their families on this happy and joyful occasion.

D.B.S.Jeyaraj 

Post a Comment

0 Comments