பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை (16-06-2025) காலை 8.00 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சி - புலோலி தெற்கு (சாரையடி - தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அண்மையில்), புலோலி, பருத்தித்துறை எனும் முகவரியில் நடைபெற உள்ளது. குடும்பத்தினர் -
மொழிப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப்பற்றும் தமிழ்த் தேசிய உணர்வுக்கு ஆதாரமானவை. தமிழ்த் தேசிய உணர்வானது விடுதலைப் பற்றிற்கு அடித்தளமானது. பண்டிதர் அவர்கள் தமிழ் மொழியில் ஆழமான புலமை பெற்றவர். தமிழ் மொழியின் தனிச் சிறப்பை உணர்ந்தவர். தமிழைத் தெய்வமாக தொழுபவர். இன்பத் தமிழில் இறையின்பம் காண்பவர். என தேசியத் தலைவர் பண்டிதர் ஐயாவுக்கான வாழ்த்துரையொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
(புலோலியூருக்குப் பெருமை சேர்த்த தமிழ்த்தாத்தா கந்தமுருகேசனாரின் அறுபதாவது நினைவு தினமான நேற்று காலமான அவரது பிரதான சீடர்களுள் ஒருவரான, தமிழ் ஆசான் பண்டிதர் வீ.பரந்தாமன்)
0 Comments