யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் (கரவெட்டி) தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இன்று 17.06.2025 இடம்பெற்ற தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வில், பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவிசாளருக்காக கு.சுரேந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தம்பையா சிவராசா ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் கு. சுரேந்திரன் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட த.சிவராசா 12 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
பகிரங்க வாக்கெடுப்பில் உபதவிசாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராசா தயாபரன் தெரிவு செய்யப்பட்டார்.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர். மொத்தமாக 7 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள், கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சனாதன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments