உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிக்கும் கிடைத்த பசுமை அமைதிச் சான்றிதழும், சிறப்பு பரிசுகளும்



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல்-02.30 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.

ஆண்டுதோறும் மாணவர்களிடையே தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் சூழல் பொது அறிவுப் பரீட்சை நடாத்தி பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் 200 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதி சான்றிதழோடு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழாவில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி ஒருவரும் பசுமை அமைதிச் சான்றிதழும், சிறப்பு பரிசுகளும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.




இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ.முகமது சுல்பீக்கர் அபூபக்கர், இயற்கைவழிச் செயற்பாட்டாளர் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments