யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை - காற்று காரணமாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பெருக்க மரமொன்று வேரோடு சரிந்து விழுந்துள்ளது.
வடமராட்சி பகுதியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலேயே பல ஆண்டுகாலமாக நன்கு வளர்ந்திருந்த பெருக்க மரத்தை பாடசாலை சமூகம் பாதுகாத்து வந்தது.
அரேபிய மாலுமிகளால், ஒட்டகங்களின் உணவுத் தேவைக்காக, ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டதாகக் கருதப்படும் பெருக்க மரம் நெடுந்தீவில் காணப்படுகிறது.
Video Click Hereவடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலும் 700 ஆண்டுகள் பழமையான பாரிய பெருக்க மரம் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
பெருக்க மரம் அல்லது பப்பரப்புளிய மரம் (Baobab) என்பது அடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். Adansonia digitata என்பது இதன் விஞ்ஞானப் பெயராகும்.
இந்த மரங்களை இலங்கை போன்ற நாடுகளுக்கு குதிரைகளுக்கான உணவுக்காக அரேபியர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.


0 Comments