சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் தமிழ்நாடு கயிலை அறக்கட்டளை முதல்வர் அருளுரை

 


யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரமத்தின்  சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி  மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் 17.04.2026 வெள்ளிக்கிழமை காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.


இதில் பன்னிரு திருமுறையும், பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களும் என்னும் தலைப்பில் தமிழ்நாடு கயிலை அறக்கட்டளை முதல்வர் துரைசாமி ஐயா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் கயிலை அறக்கட்டளையின் திருமுறைச் செயற்பாடுகள், சைவசித்தாந்த சுடர், கல்வி நெறி பற்றியும் விளக்கினார்.

பஞ்சபுராணம் மனனம் செய்து பாடியவர்கள், ஒரு திருப்பதிகம் மனனம் செய்து பாடியவர்களும் கயிலை அறக்கட்டளையினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டகள் அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments