பாடசாலை நிகழ்வுக்கு அரசியல்கட்சி பிரமுகரை அழைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 


யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியில் நீண்ட வரலாற்று பாரம்பரியம் மிக்க பாடசாலையின் முக்கிய நிகழ்வுக்கு அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை முதன்மை விருந்தினராக அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு ஆரம்ப எதிர்பு காட்டப்படுள்ளது.

பாடசாலையில் அரசியல் கலக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை.

இதுவரை காலமும் இல்லாத ஒன்றை திணிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே இந்த துண்டுப்பிரசுரங்களை நோக்க முடிகிறது.

அரசியல்வாதிகளை தவிர்த்து, பல்வேறு துறைகளிலும் சாதிக்கும் பாடசாலை பழைய மாணவர்கள் அல்லது கல்வியியலாளர்கள் ஒருவரை அழைத்து மாணவர்களுக்கு சரியான முன்மாதிரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

-தம்பன்



Post a Comment

0 Comments